| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 181113b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | 1_ |a யானை, மாடு, மனித உருவங்கள், அரூப வடிவங்கள், அலங்கார ஓவியங்கள் |b1 : |b2 = |
| 300 | : | _ _ |a பாறை ஓவியங்கள் |
| 500 | : | _ _ |a வெள்ளரிக்கோம்பை எனும் மலைக் கிராமம், மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் வழியில் மாமரம் என்னும் பேருந்து நிறுத்த்திலிருந்து சுமார் 4 கி.மீ மேற்கு திசையில் உள்ளது. இங்கு குரும்பர் எனும் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இவர்களது முன்னோர்கள் வனங்களில் வேட்டையாடியும் காடு சார் பொருட்களை சேகரித்தும் வாழ்ந்து வந்தவர்கள். இவ்வூர் எல்லையின் இறுதியில் உள்ள மலை உச்சியில் தேன் பாறை ஒன்று உள்ளது. அதை உள்ளூர் மக்கள் “ எழுத்துப்பாறை” என அழைக்கின்றனர். சித்திரம் என்பதற்கு எழுத்து என்ற பெயரும் உண்டு. இங்குள்ள பாறையில் எண்ணற்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலன ஓவியங்கள் அழிந்த நிலையில் உள்ளன. இருப்பினும் 50- க்கும் மேற்பட்ட ஓவியங்கள் நல்ல நிலையில் காணக்கிடைக்கின்றன. இங்கு கை , விலங்குகள், மனித உருவங்கள் மற்றும் நேர்த்தியாகவும், எளிமைப்படுத்தியும் உள்ளது. பெரும்பாலன ஓவியங்கள் சிவப்பு வண்ணத்தில் கோட்டோவியங்களாக இருக்கின்றன. வெள்ளை வண்ணத்தில் சில ஓவியங்கள் கோட்டோவியமாகவும், வண்ணம் நிரப்பப்பட்டும் காணப்படுகின்றன. தமிழகத்தில் காணப்படும் பெரும்பாலான பாறை ஓவியங்கள் உள்ள இடங்கள் வழிபாட்டுத் தலங்களாக இல்லை. ஆனால், இங்கு ஆண்டு தோறும் குறும்பர் இனத்தைச் சார்ந்த மக்கள் தங்கள் பூசாரியுடன் எழுத்துப்பாறைக்குச் சென்று பூஜை செய்து வழிபடுகின்றனர். அச்சமயம் பக்தர்கள் தங்கள் வேண்டுதலைச் சொல்வார்கள். பூசாரி, சிவப்பு மண் சாந்து கொண்டு அவர்கள் வேண்டுதலுக்கு உரிய சில குறியீட்டு ஓவியங்களை பாறையில் வரைவதுண்டு. இம் மரபு கடந்த 20 ஆண்டுகள் வரை இங்கு தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a எழுத்துப் பாறை ஓவியங்களில் பெரும்பான்மையானவை வடிவியல் கோட்பாட்டைத் தழுவியுள்ளது போல காட்சியளிக்கிறது. வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம் போன்ற வடிவங்களைக் கொண்டு மனித உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அது போல் ஓவியங்களுக்கு மேல் ஓவியங்கள் தொடர்ந்து சில இடங்களில் காணப்படுகின்றது. இருப்பினும் பாறை ஓவியங்களில் சடங்கு சம்பந்தமான ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். |
| 653 | : | _ _ |a குறும்பர், வெள்ளரிக்கோம்பை, நீலகிரி, பாறை ஓவியம், பெருங்கற்காலம், புதிய கற்காலம், தமிழ்நாடு |
| 700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 752 | : | _ _ |a வெள்ளரிக்கோம்பை |b # |c வெள்ளரிக்கோம்பை |d நீலகிரி |f கோத்தகிரி |
| 850 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 914 | : | _ _ |a 11.4142991 |
| 915 | : | _ _ |a 76.8663307 |
| 995 | : | _ _ |a TVA_PNT_00036 |
| barcode | : | TVA_PNT_00036 |
| book category | : | பாறை ஓவியங்கள் |
| cover | : |
|
| Primary File | : |